தொடர்ந்து ஏழாவது நாளாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருகிறது . அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மதியம் 12.40 மணியளவில் 72.08 என்ற அளவில் இருந்தது. புதன்கிழமை வர்த்தக முடிவு நேரத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.76 என்ற அளவில் இருந்தது. அதை ஒப்பிட்டால் இன்று 0.40% அளவுக்கு ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது.
அதே நேரம் மத்திய, நிதியமைச்சர் அருண் ஜேட்லி இந்த விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், நிலைமை சீரடையும் என்றும் தெரிவித்து வருகிறார்.