பாகிஸ்தான் புதிய ஜனாதிபதிக்கும் நேருவுக்கும் இடையேயான சுவாரஸ்ய தகவல்!

செப்டம்பர் 06, 2018 577

இஸ்லாமாபாத் (06 செப் 2018): பாகிஸ்தான் புதிய அதிபரான டாக்டர் ஆரிஃப் அல்விக்கும் மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்ற நிலையில், அந்நாட்டு 13 வது ஜனாதிபதியாக டாக்டர் ஆரிஃப் அல்வி (69) தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். அல்வியின் தந்தை டாக்டர் ஹபீப் ரஹ்மான் இலாஹி அல்வி, மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருக்கு பல் மருத்துவராக பணிபுரிந்தவர் என்ற சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு நேரு குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த டாக்டர் ஹபீப் ரஹ்மான் இலாஹி அல்வி, பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு கராச்சி சென்றுவிட்டார். பாக் ஜனாதிபதி டாக்டர் ஆரிஃப் அல்வி 1949 ல் கராச்சியில் பிறந்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முசாரஃபின் பெற்றோர் பிரிவினைக்கு முன்பு டெல்லியை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...