ஆம்புலன்ஸ் வராததால் நடு காட்டில் நடந்த பிரசவம்!

September 07, 2018

விஜயநகரம் (07 செப் 2018): ஆந்திராவில் ஆம்புலன்ஸ் வராததால் பெண் ஒருவருக்கு நடு காட்டில் பிரசவம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயநகரம் பகுதியில் பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் ஆம்புலன்ஸை அழைத்தனர். ஆனால் அந்த பெண் இருந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ் செல்ல இயலாது என்று டிரைவர் மறுத்துவிட்டார்.

பிரசவ வலியால் துடித்த பெண்ணை மரக்கட்டையில் துணி கட்டப்பட்டு, அதில் அந்த கர்ப்பிணி பெண்ணை அமர்த்தி, அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அப்போது, பாதி வழியிலேயே அந்த பெணுக்கு, குழந்தை பிறந்தது.

இதுபோன்று அப்பகுதியில் அவ்வப்போது நடப்பதாகவும், இதனை தடுக்க வழி செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!