அனைத்து மத ஏழை மக்களின் பசியை தீர்க்கும் மசூதி நிர்வாகம்!

செப்டம்பர் 07, 2018 868

மலப்புரம் (07 செப் 2018): கேரள மாநிலத்தில் உள்ள ஒரு மசூதியில் ஜாதி மத பேதமின்றி ஏழை எளியோருக்கு மாதம் முழுவதும் பயன்படுத்தும் வகையில் இலவசமாக அரிசி வழங்கப் படுகிறது.

மனிதனின் மிக முக்கிய தேவை உணவாகும். அதை மனதில் கொண்டு கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வாலஞ்சேரி மூனாக்கல் ஜும்ஆ பள்ளியில் மாதம் தோறும், ஜாதி மத பேதமின்றி 15000 ஏழை எளியோருக்கு இலவசமாக அரிசி வழங்கப் படுகிறது.

மசூதி நிர்வாகம் ஆரம்பத்தில் தொடங்கிய இந்த சேவையை பார்த்து அருகில் உள்ள பிற மத செல்வந்தர்களும் மசூதி நிர்வாகத்திற்கு அரிசிக்கான தொகையை வழங்கி வருகின்றனர். நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகமனதை அடுத்து அடையாள அட்டை வழங்கப் பட்டு ரேஷன் அட்டை போல அரிசி வழங்கியதும் அதில் குறித்துக் கொள்வார்கள்.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை இந்த அரிசி வழங்கும் சேவை நடைபெறும். ஒரு முறை வழங்கினாலும் அதனை மாதம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அரிசி கணக்கிடப் பட்டு வழங்கப் படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...