ஹர்திக் பட்டேல் மருத்துவ மனையில் அனுமதி!

September 08, 2018

ஆமதாபாத் (08 செப் 2018): பட்டேல் சமூக மக்களுக்காக உண்ணாவிரதம் இருந்துவரும் ஹர்திக் பட்டேல் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

14-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் பட்டேல் அகமதாபாத்தில் உள்ள சோலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குஜாரத்தின் படேல் இனத்தை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இணைக்ககோரியும், அவர்கள் பெற்றுள்ள வங்கி கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும் ஆகஸ்ட் 25-ம் தேதிமுதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கடந்த 14 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஹர்திக் பட்டேல் தண்ணீர் குடிப்பதை நிறுத்தியதால் 20 கிலோ எடை வரை குறைந்து உடல் நலிவுற்றுள்ளார்.

ஹர்திக் பட்டேலின் கோரிக்கைகளை பற்றி இதுவரை கருத்து தெரிவிக்காத நிலையில், பட்டேலின் உடல்நிலை குறித்து வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும், அவரது இந்த போராட்டத்தின் பின்னால் காங்கிரஸ் கட்சி உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

குஜராத் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ஹர்திக் பட்டேலின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 24 மணி நேர உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர். பட்டேலின் கோரிக்கைக்கு குஜராத் அரசு செவி மடுக்கவேண்டுமென திமுக, சமாஜ்வாதி கட்சி, திரிணாமூல் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளும் கருத்து தெரிவித்துள்ளன.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!