பிரபல பத்திரிகையின் மூத்த ஆசிரியர் மீது வீடு புகுந்து தாக்குதல்!

செப்டம்பர் 08, 2018 608

திருவனந்தபுரம் (08 செப் 2018): கேரளாவில் மாத்துருபூமி நாளிதழின் ஆசிரியர் வினோத சந்திரனையும், அவரது மனைவியையும் வீடு புகுந்து தாக்கப்பட்டனர். இச்சம்பவம் கேரளாவெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் முன்னணி பத்திரிக்கையான மாத்துருபூமியின் மூத்த ஆசிரியரான வினோத் சந்திரன். இன்று மதியம் சுமார் 1.30 மணியளவில் தாழிச் சொவ்வா பகுதியில் உள்ள சந்திரனின் வீட்டுக் கதவுகள் உடைக்கப்படும் சத்தம் கேட்டுள்ளது. வினோத்தும், அவரது மனைவி சரிதாவும் அறையை விட்டு வெளியில் வந்து பார்த்த போது, 4 பேர் கொண்ட கும்பல் அவர்கள் இருவரின் கண்களையும், வாயையும் கட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் வினோத்தும், சரிதாவும் பலத்த காயமடைந்துள்ளனர். இது குறித்து பேசிய வினோத் “அவர்கள் எங்கள் இருவரின் கண்களையும், வாயையும் கட்டிவிட்டு எங்களை தாக்கினர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் சென்றவுடன் என்னால் கட்டுகளை அவிழ்க்க முடிந்தது. இல்லையேல் இருவரும் அங்கேயே இறந்திருப்போம்” என்று தெரிவித்தார்.

வினோத்தையும், சரிதாவையும் தாக்கிவிட்டு 1 மணி நேரம் வீட்டில் இருந்த கொள்ளை கும்பல், 35,000 ரூபாய் பணம், 25 சவரன் தங்கம், மடிக்கணினி, செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றன. இந்த கும்பல் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் பேசிக்கொண்டதாக வினோத் தெரிவித்துள்ளார். இதனால் இவர்கள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...