மோடிக்கு மன்மோகன் சிங் சரமாரி கேள்வி!

செப்டம்பர் 08, 2018 501

புதுடெல்லி (08 செப் 2018): ஆண்டு தோறும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாக உறுதி அளித்த வேலை வாய்ப்பு எங்கே என்று பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் “உண்மையின் நிழல்கள்- தடம்மாறிய பயணம்” என்ற தலைப்பில் புத்தகம் எழுதி, வெளியிட்டார். டெல்லியில் நடைபெற்ற இந்த விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசும்போது ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லையென்றும், இளைஞர்கள் சரியான வேலை கிடைக்கமால் துன்பப்படுகிறார்கள் என்று தெரிவித்த மன்மோகன் சிங், கபில் சிபலின் புத்தகம், கடந்த 4 ஆண்டுகளில் பாஜக அளித்த வாக்குறுதிகள் பற்றியும், அவற்றில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்தும் புள்ளிவிவரங்களுடன் தெரிவிக்கிறது என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...