சோனாலி பிந்த்ரே மரணம் என்று பதிவிட்டு சிக்கிக் கொண்ட பாஜக எம்.எல்.ஏ!

செப்டம்பர் 08, 2018 520

மும்பை (08 செப் 2018): நடிகை சோனாலி பிந்த்ரே மரணம் என்று ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் மும்பையைச் சேர்ந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ராம் கதம்.

புற்றுநோயால் அவதிப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் நடிகை இறந்து விட்டதாக நினைத்துக் கொண்ட ராம் கதம், சோனாலி பிந்த்ரே அமெரிக்காவில் காலமானார். அவரது மறைவுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொளிகிறேன் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதனால் அவருக்கு எதிராக கடும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

உடனடியாக தனது பதிவை நீக்கிய அவர், நடிகை சோனாலி பிந்த்ரே குறித்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவரின் ஆரோக்கியமான உடல்நிலயை பெறவும், விரைவில் குணமடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன் என மற்றொரு ட்வீட் போட்டுள்ளார்.

முன்னதாக சமீபத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது நடந்த உறியடி விழாவில் இளைஞர்கள் விரும்பும் பெண்களை கடத்தி ஒப்படைப்பதாக கூறி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...