வாட்ஸ் அப்பால் தடை பட்ட திருமணம்!

செப்டம்பர் 09, 2018 672

லக்னோ (09 செப் 2018): உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நீண்ட நேரம் வாட்ஸ்அப்பில் சேட் செய்ததால் அவரது திருமணம் பாதியில் நின்றது.

உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹா மாவட்டத்திலுள்ளது நௌகான் சதத் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் உரோஜ் மெஹந்தி. இவர் தனது மகளை ஃபகீர்புரா கிராமத்தைச் சேர்ந்த கமர் ஹைதர் என்பவரது மகனுக்கு கடந்த 5-ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப் பட்டிருந்தது.

அன்றைய தினம் நீண்ட நேரமாகியும் மணமகனின் குடும்பத்தினர் வராததால் உரோஜ் மெஹந்தி தொலைபேசியில் அவர்களை தொடர்புகொண்டார். அப்போது, திருமணத்தை ரத்து செய்வதாக கமர் ஹைதர் தெரிவித்துள்ளார். இதற்கான காரணத்தை கேட்டபோது, மணமகள் நீண்ட நேரம் வாட்ஸ்அப்பில் சேட் செய்யும் பழக்கம் உடையவர் என்பதால் திருமணத்தை ரத்து செய்வதாக கூறியுள்ளனர்.

உரோஜ் மெஹந்தி போலீஸில் புகார் செய்தார். இதுகுறித்து, அம்ரோஹா காவல்துறை கண்காணிப்பாளர் விபின் தடா கூறியதாவது: மணமகள் நீண்ட நேரம் வாட்ஸ்அப்பில் சேட் செய்வதாகவும், மணமகனின் சகோதரர்களிடமும் அவர் சேட் செய்ததாக மணமகனின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து, உரோஜ் மெஹந்தியிடம் விசாரித்தபோது, மணமகனின் குடும்பத்தினர் ரூ.65 லட்சத்தை வரதட்சணையாக கேட்டதாகவும், அதை தராததால் திருமணத்தை அவர்கள் நிறுத்திவிட்டதாக விபின் தடா தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...