டெல்லி மற்றும் அரியானாவில் நில நடுக்கம்!

செப்டம்பர் 09, 2018 501

புதுடெல்லி (09 செப் 2018): டெல்லி மற்றும் அரியானாவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் ஜிஜார் மாவட்டத்தில் இன்று மாலை 4.37 மணிக்கு திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 3.8 ஆகவும், பூமியின் 10கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகத் தேசிய நிலஅதிர்வுஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நில அதிர்வு தலைநகர் டெல்லி, குருகிராம், மஹாவீர் என்கிளேப் ஆகிய பகுதிகள் வரைஉணரப்பட்டது. பூகம்பம் ஏற்பட்டபோது, ஜிஜார் மாவட்டத்தில் கட்டிடங்கள் லேசாகக் குலுங்கியதால்,மக்கள் பீதியடைந்து அலறி வெளியே ஓடி சாலைக்கு வந்தனர். இதுமிதமான நிலநடுக்கம் என்பதால், எந்தவிதமான சேதமும், பொருள் இழப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...