காஷ்மீர் சிறுமி வன்புணர்ந்து கொல்லப் பட்ட வழக்கில் டாக்டர்கள் பரபரப்பு வாக்கு மூலம்!

செப்டம்பர் 10, 2018 770

பதான்கோட் (10 செப் 2018): காஷ்மீரில் 8 வயது சிறுமி வன்புணர்ந்து கொல்லப் பட்ட வழக்கில் போஸ்ட் மார்ட்டம் செய்த மருத்துவர்கள் நீதிமன்றத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கோவிலில் வைத்து கூட்டு வன்புணர்வு செய்ததோடு கொடூரமாக படுகொலை செய்யப் பட்டார்.

இந்த வழக்கின் விசாரணை பதான்கோட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிறுமியின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டர்கள் நீதிபதி முன்பு வாக்கு மூலம் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த வாக்கு மூலத்தில், சிறுமி பலமுறை வன்புணர்வு செய்யப் பட்டதாகவும், பின்பு படுகொலை செய்யப் பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வாக்கு மூலம் நீதிபதிகளால் பதிவு செய்யப் பட்டது என்று வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கில் சுமார் 54 பேரிடம் விசாரணை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...