ஐதராபாத் குண்டு வெடிப்பு வழக்கில் இருவருக்கு மரண தண்டனை!

செப்டம்பர் 10, 2018 606

ஐதராபாத் (10 செப் 2018): ஐதராபாத் பூங்கா குண்டு வெடிப்பு வழக்கில் இருவருக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹைதராபாத்தில் ஆகஸ்ட் 25, 2007ஆம் ஆண்டு கோகுல் சாட் மற்றும் லும்பினி பூங்கா ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப் பட்டனர்.

இந்த வழக்கில் அனிக் சையீத் மற்றும் அக்பர் இஸ்மாயில் சௌதாரி ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து இரண்டாவது பெருநகர அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இதில் குற்றாம் சட்டப் பட்ட தாரிக் அன்ஜும் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட பரூக் ஷர்ஃபுதின் மற்றும் சாதிக் இஷ்ரத் ஆகியோர் ஏற்கனவே வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த இரட்டை குண்டுவெடிப்பில் 43 பேர் உயிரிழந்தது மட்டுமில்லாமல் மேலும் 63 பேர் காயமைடைந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...