பேருந்து விபத்தில் சம்பவ இடத்திலேயே 32 பேர் பலி!

செப்டம்பர் 11, 2018 474

குண்டகட்டா (11 செப் 2018): தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் சம்பவ இடத்திலேயே 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் குண்டகட்டா மலைபாதையில் இன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் 32 பயணிகள் பலியானதாகவும் 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. படுகாயம் அடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...