டிவி லைவ் ஷோவில் நடந்த திடீர் மரணம்!

செப்டம்பர் 11, 2018 634

ஶ்ரீநகர் (11 செப் 2018): காஷ்மீர் சமூக ஆர்வலரும் அறிஞருமான ரிட்டா ஜெதிந்தர் டிவி லைவ் நிகழ்ச்சியின்போது திடீரெண மரணம் அடைந்தார்.

பிரபல அறிஞரும், எழுத்தாளருமான ரிட்டா ஜெதிந்தர் ஜம்மு காஷ்மீர், கலை மற்றும் அறிவியல் அகாடமியின் செயலராக இருந்து வந்தார். இந்நிலையில் தூர்தர்ஷன் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று அவரது வளர்ச்சி குறித்தும் அவரது வாழ்க்கை குறித்தும் பேசிக் கொண்டு இருந்தார்.

இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே சரிந்து விழுந்து மரணம் அடைந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...