வக்பு போர்டை சுய லாபத்துக்கு பயன் படுத்துவதாக வசீம் ரிஜ்வி மீது குற்றச் சாட்டு!

செப்டம்பர் 11, 2018 464

புதுடெல்லி (11 செப் 2018): வக்பு போர்டை சுய லாபத்துக்கு பயன் படுத்துவதாக ஷியா வக்பு போர்டு தலைவர் வசீம் ரிஜ்வி மீது பாஜக எம்.எல்.சி புல்கல் நவாப் குற்றம் சாட்டியுள்ளார்.

புல்கல் நவாப் வக்பு போர்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் வசீம் ரிஜ்வி மீது குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அரசு அவருக்கு உதவி புரிவதாகவும், தெரிவித்துள்ளார்.

பதவி காலம் முடிந்தும் வசீம் ரிஜ்வி பதவியில் நீடிப்பது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ள புல்கல் நவாப், வசீம் ரிஜ்வியை பதவியிலிருந்து உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் இருக்கும் வரை வக்பு போர்டில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் புல்கல் நவாப் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...