இன்றைய ரூபாய் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

செப்டம்பர் 12, 2018 1277

மும்பை (12 செப் 2018): அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.88-ஆக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவதை கட்டுப்படுத்தும்படி ரிசர்வ் வங்கியை, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ள நிலையில், ரூபாய் மதிப்பு மீண்டும் சரிவடைந்துள்ளது. இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் 18 பைசா சரிந்து டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.72.87 ஆக உள்ளது. ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது.

இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...