இந்து யுவ வாஹினி நிர்வாகி வீட்டில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

September 13, 2018

காஜியாபாத் (13 செப் 2018): உத்திர பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் இந்து யுவ வாஹினி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி வீட்டில் பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த ஆசிரியர் தினத்தன்று மோடி அரசுப் பள்ளியில், 10 ஆம் வகுப்பு பயிலும் இந்து யுவ வாஹினி நிர்வாகி ஜிதேந்த்ர தியாகி மகனுக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கையில் துப்பாக்கி வைத்திருந்த ஜிதேந்தர் மகன் மற்றும் அவரது நண்பர்கள் பத்து முறை வானைப் பார்த்து துப்பாகியால் சுட்டுள்ளனர்.

மாணவர்கள் கையில் துப்பாக்கி இருந்தது குறித்து போலிசாருக்கு தகவல் கொடுக்கப் பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் பள்ளிக்கு விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் துப்பாக்கியால் சுட்ட மாணவர்களையும் கைது செய்தனர்.

இதனை அடுத்து நடத்தப் பட்ட விசாரணையில் ஜிதேந்தர் வீட்டில் சோதனை நடத்தப் பட்டது. அப்போது போலீசார் அதிர்ந்தனர். அங்கு போலீசாரும், ராணுவத்தினரும் பயன்படுத்தும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. அவற்றை கைபற்றிய போலீசார் இந்து யுவ வாகினி நிர்வாகி ஜிதேந்தர் தியாகி, மற்றும் அவரது உதவியாளர் அமிஷ் குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்து யுவ வாஹினி அமைப்பு முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நேரடி பார்வையில் இயக்கும் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Search!