கல்வியறிவில்லாத மோடி- பிரதமர் குறித்து அசோக் சவான் சர்ச்சை பேச்சு!

செப்டம்பர் 13, 2018 514

புதுடெல்லி (13 செப் 2018): பிரதமர் மோடி கல்வியறிவில்லாதவர் என்று காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், மீண்டும் பிரதமர் மோடி ஒன்றும் கடவுள் இல்லை என்றும் அவர் கல்வியறிவில்லாதவர் என்றும் அவரிடம் கேள்வி கேட்கக் கூடாதா? என்றும் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள பள்ளிகூடங்களில் பிரதமரின் மோடியின் வாழ்க்கை குறித்த ஒரு குறுகிய படம் திரையிடப்படும் என்று மகாராஷ்டிரா அரசு கூறியுள்ளது. இதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், கல்வியறிவில்லாத சாதாரண நபர் ஒருவர் குறித்து திரையிடுவதால் என்ன பயன்? என்று தெரிவித்துள்ளார்.

தன்னை தற்காத்து, பிரதமரின் கல்வி விவரங்களை அளிக்க தில்லி பல்கலைக்கழகம் ஏன் விரும்பவில்லை என அசோக் சவான் கேள்வி எழுப்பினார். "பிரதமரின் கல்வித் தகுதியைப் பற்றி குழந்தைகள் கேட்டால், அவர்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள்? மக்களுக்கும் பிரதமர் மோடியின் கல்வித் தகுதி தெரியாது. பிரதமரின் கல்வி விவரங்களை வெளியிட வேண்டாம் என்று தில்லி பல்கலைக்கழகத்டுக்கு அழுத்தம் கொடுப்பது யார்? மேலும் எந்த கால கட்டத்தில் அவர் அங்கு படித்தார் என்றும் கேட்டுள்ளார் அசோக் சவான்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...