இந்தியாவில் தடை செய்யப் பட்ட சில மருந்துகளுக்கு மீண்டும் அனுமதி!

செப்டம்பர் 17, 2018 567

புதுடெல்லி (17 செப் 2018): சாரிடான் உள்ளிட்ட மூன்று மருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் தடையை நீக்கி அனுமதி அளித்துள்ளது.

மருந்து மாத்திரைகளை மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக்கழகம் ஆய்வின்படி உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் 327 மருந்துகளை தடை செய்ய வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், மத்திய அரசின் தடைக்கு எதிராக மருந்து நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முதற்கட்டமாக சாரிடான், டார்ட், பிரிட்டான் ஆகிய மூன்று மருந்துகளுக்கும் விதிக்கப்பட்ட தடையை நீக்கி விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...