கர்நாடக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் முதல்வரின் அதிரடி முடிவு!

செப்டம்பர் 17, 2018 534

பெங்களூரு (17 செப் 2018): கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

பெட்ரோல் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. விரைவில் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி 4 சதவீதம் குறைக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்தது. அதேபோல் ஆந்திராவிலும் பெட்ரோல், டீசல் மீதான வரி 2 ரூபாய் வரை குறைக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

இந்த நிலையில் கர்நாடகத்திலும் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து முதலமைச்சர் குமாரசாமி நிதித்துறை உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்படும் என முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...