முதல்வரை மார்ஃபிங் மூலம் அவமானப் படுத்திய பாஜக நிர்வாகி கைது!

செப்டம்பர் 19, 2018 532

கொல்கத்தா (19 செப் 2018): மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை மார்ஃபிங் மூலம் சித்தரித்த பாஜக நிர்வாகி கைது செய்யப் பட்டுள்ளார்.

மேற்குவங்கம் மிட்நாபூர் மாவட்டத்தை சேர்ந்த பாபுயா கோஷ் என்ற பாஜக நிர்வாகி மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ,ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் இருவரும் ஒன்றாக கட்டிப்படித்தபடி இருப்பது போல் சில போட்டோக்களை மார்ஃபிங் செய்து அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் இருவரையும் ஒன்றாக இணைத்து சில அவதூறான வசனங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகவே, இதுகுறித்து சிலர் போலீஸிடம் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாபுயாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...