17 வயது மாணவி 19 வயது மாணவனால் பாலியல் வன்புணர்வு!

செப்டம்பர் 19, 2018 558

புதுடெல்லி (19 செப் 2018): ஹரியானாவில் 17 வயது மாணவி ஒருவரை 19 வயது மாணவர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப் பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள ரேவரி என்ற மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் நேற்று காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தன்னுடன் பள்ளியில் படித்த 19 வயது முன்னாள் மாணவர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் மாணவியை பலாத்காரம் செய்த மாணவரை கைது செய்தனர். இதேபோல் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிந்த் என்ற மாவட்டத்திலும் ஒரு பெண் தன்னை இரண்டு ஆண்கள் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார். ஹரியானாவில் இளம்பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருவதால் முதல்வர் மனோகர்லால் கட்டார் உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதே மாவட்டத்தில் சமீபத்தில் சி.பி.எஸ்.இ மாணவி ஒருவரை கூட்டு வன்புணர்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...