மோடிக்கு எதிராக வெகுண்டெழுந்துள்ள குஜராத் விவசாயிகள்!

செப்டம்பர் 20, 2018 513

புதுடெல்லி (20 செப் 2018): புல்லட் ரெயில் திட்டத்தை எதிர்த்து ஆயிரக் கணக்கான விவசாயிகள் பிரதமர் மோடிக்கு எதிராக, ஜப்பான் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மத்திய பாஜக அரசு புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக முனைந்து வருகிறது. இந்த ரயில் மஹாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கும், குஜராத்தின் அஹமதாபத்துக்கும் இடையில் இயக்கப்படும். இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் இதுவாகும். இதை 2020க்குள் முடிக்கவும் அரசு யோசனை செய்து வருகிறது.

1.60 லட்சம் கோடி இதற்கு செலவு ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 1.10லட்சம் கோடி ரூபாயை ஜப்பான் அரசு கடனாக கொடுக்கிறது. ஜப்பான் அரசு மூலம் ''ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்'' வழங்கும் பணத்தில் ஜப்பான் ஊழியர்கள் இந்த புல்லட் ரயில் பாதையை போட இருக்கிறார்கள்.

இதற்காக குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில் சுமார் 1400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 1120 ஏக்கர் நிலம் தனியாருடையது. அதில் 900 ஏக்கர் நிலம் விவசாய நிலம். இதனால் பல ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட இருக்கிறார்கள். பலருடைய நிலம் ஏற்கனவே இதற்காக வாங்கப்பட்டுவிட்டது.

இதனால் வெகுண்டெழுந்த விவசாயிகள் பிரதமர் மோடிக்கு எதிராகவும், இந்த திட்டத்திற்கு எதிராகவும் ஜப்பான் அரசுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். அதேபோல் பணம் வழங்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் இதற்காக கடிதம் எழுதியுள்ளனர். அதேபோல குஜராத் உயர் நீதிமன்றத்திலும் இத்திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரப் பட்டுள்ளது.

மோடியின் கோட்டையிலேயே மோடிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...