சொந்த மகளை வன்புணர்வு செய்த தந்தை கைது!

செப்டம்பர் 20, 2018 593

தானே (20 செப் 2018): மஹாராஷ்டிராவில் சொந்த மகளையே வன்புணர்வு செய்த தந்தை கைது செய்யப் பட்டுள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் தானே பகுதியில் மனைவியை பிரிந்து, தனது மகளுடன் தனியாக 7 வருடம் வாழ்ந்து வந்திருக்கிறார் இந்த 40 வயது தந்தை. ”கடந்த நான்கு வருடங்களாக மீண்டும் மீண்டும் தன்னை பாலியல் வன்கொடுமைகள் செய்து வருகிறார்” என்று மகளே போலிஸாரிடம் கூறியிருக்கிறார். பின்னர், துன்புறுத்தலை தாங்க முடியாமல் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் உதவியை நாடி, புதன் கிழமை அன்று போலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

இதனை அடுத்து . கைது செய்யப்பட்ட தந்தையின் மீது இபிகோ பிரிவு 376 கீழும், போஸ்கோ சட்டத்திலும் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...