ஜெட் ஏர்வேய்ஸ் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை!

செப்டம்பர் 21, 2018 546

மும்பை (21 செப் 2018): பாதிப்புக்கு ஆளான பயணிகளுக்கு ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மும்பையிலிருந்து ஜெய்ப்பூர் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணிகள் சிலருக்கு காதிலும், மூக்கிலும் ரத்தம் கசிந்தது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

166 பயணிகளுடன் மும்பையிலிருந்து ஜெய்ப்பூர் சென்றுக்கொண்டிருந்தது ஜெட் ஏர்வேஸ் விமானம். விமானம் உயரே பறக்க எத்தனித்தபோது, சில பயணிகளுக்கு மூக்கிலும் காதிலும் ரத்தம் வடிந்தது. உடனே பயணிகள் அனைவருக்கும் ஆக்சிஜன் மாஸ்க் அளிக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு பாலாபாய் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மற்றவர்களுக்கு விமான நிலையத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்கள் காற்றழுத்த மாற்றங்களினால் ஏற்படும் பாரோட்ரோமா (barotrauma) எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஐந்து ஆண் பயணிகளுக்கும் தற்காலிகமாக காது கேளாது எனவும், குறைந்தது 10 நாள்களுக்கு இவர்கள் விமான பயணத்தை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பயணி ஒருவர் 30 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பயணி ஒருவர் 30 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரியுள்ளதாகவும், விமான நிறுவனத்தினரிடம் பயணிகள் பாதுகாப்பு குறித்து கடும் விவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...