இந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை?

செப்டம்பர் 22, 2018 680

வாஷிங்டன் (22 செப் 2018): ரஷ்யாவிடம் போர் விமானம் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ள இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

ரஷியாவிடமிருந்து எஸ்-400 டிரையம் ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்யவுள்ள இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 400 கி.மீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆள் இல்லாத குட்டி விமானங்களை வழிமறித்துதாக்கி அழிக்கும் திறன் கொண்ட ரஷ்யாவின் எஸ் 400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை இந்திய விமானப்படைக்கு கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தான் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ் 400 ரக ஏவுகணைகளை வாங்க கடந்த சில ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில்,சீன பாதுகாப்பு நிறுவனம் ஒன்று ரஷியாவிடம் இருந்து சுகோய் ரக போர் விமானங்களையும், எஸ்-400 ரக ஏவுகணைகளையும் கொள்முதல் செய்த விவகாரத்தில், எதிரி நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கும் சட்டத்தின் கீழ் அந்த நிறுவனத்தின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

இது, ரஷியாவிடமிருந்து எஸ்-400 டிரையம் ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்யவுள்ள இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆனால், அண்மையில் அமெரிக்க-இந்திய நாடுகளின் அமைச்சர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ், இந்தப் பொருளாதாரத் தடை முற்றிலும் ரஷியாவுக்கானது. இந்தியா போன்ற நட்பு நாடுகளை இந்தப் பொருளாதாரத் தடை பாதிக்காத வகையில் அமெரிக்காவின் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...