மோடி திருடன் என்ற பிரான்ஸின் குற்றச் சாட்டிற்கு பதில் என்ன? - ராகுல் காந்தி விளாசல்!

செப்டம்பர் 22, 2018 653

புதுடெல்லி (22 செப் 2018): ரபேல் ஒப்பந்தத்தில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலப்டே மோடி மீது வைத்துள்ள குற்றச்சட்டிற்கு பதில் என்ன? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக மத்திய அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே, மோடி அரசின் ஆலோசனையின் படிதான் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ‘டஸ்ஸால்ட்’ ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது.

இந்திய அரசால் கைக்காட்டப்பட்ட ஒரு நிறுவனத்தை எனது ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தத்தில் இணைத்தோம். இதில் பிரான்ஸ் அரசு முடிவு செய்ய எதுவுமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இதுதொடர்பாக செய்திகள் வெளியானதும் பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு தனக்கு வேண்டியவர்களுக்கு சாதமாக செயல்பட்ட ரகசியத்தை வெளியிட்டதற்காக பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் ட்விட்டடில் இதுகுறித்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ‘பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, ரபேல் ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளார். ஹலாண்டேவிற்கு நன்றி, பிரதமர் தனிப்பட்ட முறையில் ஒரு பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு ஒப்பந்தத்தை அம்பானிக்கு வழங்கியுள்ளார் என்பது இப்போது எங்களுக்கு தெரிந்துவிட்டது. பிரதமர், இந்தியாவிற்கு துரோகம் செய்துவிட்டார். இந்திய ராணுவ வீரர்களின் இரத்தத்திற்கு பிரதமர் அவமரியாதை செய்துள்ளார்.’ மோடி திருடன் என்று பிரான்ஸே ஒப்புக் கொண்டுள்ள நிலையில் பிரதமர் மோடி இதற்கு என்ன பதில் அளிக்கவுள்ளார்? என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...