ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இந்திய ஹஜ் கமிட்டிக்கு 70 கோடி இழப்பு!

செப்டம்பர் 24, 2018 564

புதுடெல்லி (24 செப் 2018): டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதால் இந்திய ஹஜ் கமிட்டிக்கு ரூ 70 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வருடன் ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்தவர்களிடம் வசூலிக்கப் பட்ட தொகையைக் காட்டிலும் ரூ 70 கோடி ஹஜ் கமிட்டிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து விவாதிக்க இன்று ஹஜ் கமிட்டி நிர்வாகிகள் கூடுகின்றனர். மேலும் இந்த இழப்பை சரிகட்ட இவ்வருடம் ஹஜ் செய்தவர்களிடம் மேலும் நபருக்கு ரூ 5500 வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் எம். அஃபசல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இழப்பு என்பது எதிர் பாராதது அதனை அரசே சரி கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். எனினும் ஹஜ் கமிட்டி இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...