மூன்று வயது குழந்தை வன்புணர்ந்து கொலை - ஜார்கண்டில் கொடூரம்!

செப்டம்பர் 24, 2018 478

ராஞ்சி (24 செப் 2018): ஜார்கண்ட் மாநிலத்தில் மூன்று வயது குழந்தை வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் உள்ள கோல்ஹுடோலி என்ற கிராமத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது குழந்தையை அருகில் உள்ள வீட்டுக்காரர் ஓரம் என்பவர் வன்புணர்ந்துள்ளார். ஆனால் இதனை அவர் மறைந்து விட்டார்.

இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் குழந்தையை தேடியபோது, ஓரம் குழந்தை தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பதாக கூறினார். உடன் குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தனர். ஆனால் குழந்தையின் தாயின் கை ரத்தமாக இருந்துள்ளது. குழந்தையை சோதனை செய்ததில், குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ந்தனர். அருகில் உள்ள மருத்துவரிடம் காண்பித்தபோது குழந்தை இறந்துவிட்டதாகவும், வன்புணர்வு செய்ததால்தான் குழந்தை இறந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பெற்றோர் கதறி அழுதனர்.

இதற்கிடையே குழந்தையை வன்புணர்ந்த ஓரம் அங்கிருந்து தப்பித்துவிட்டான். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஓரமை தேடி வருகின்றனர். மேலும் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...