விமானம் பறந்து கொண்டிருந்த போது கதவை திறந்த பயணி!

செப்டம்பர் 25, 2018 567

புதுடெல்லி (25 செப் 2018): நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது பயணி ஒருவர் விமானத்தின் கதவை திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சனிக்கிழமை அன்று டெல்லியிலிருந்து பாட்னாவுக்கு G8 149 - GOAIR விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 150 பயணிகள் இருந்தனர்.

இந்நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, பயணிகள் வெளியேறும் கதவை திறக்க முயற்சி மேற்கொண்டிருந்தார். இதனை பார்த்த மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே விமான ஊழியர்களிடம் இதுகுறித்து தெரிவித்ததும் அவரை அவரது இருக்கையில் அமர வைத்தனர்.

பின்பு விமானம் பாட்னா தரையிறங்கியதும், அந்த பயணி, மத்திய தொழில் பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைக்கப் பட்டர். அவர்கள் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் முதன்முதலாக விமானத்தில் பயணிப்பதாகவும், கழிவறைக்கு பதிலாக தவறுதலாக வெளியே செல்லும் கதவை திறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...