ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்தவர்கள் ரூ 5600 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்!

செப்டம்பர் 26, 2018 712

மும்பை (26 செப் 2018): பணம் மதிப்பு வீழ்ச்சியால் ஏற்பட்ட இழப்பை சரிகட்ட ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்த ஹாஜிகளிடம் ரூ 5600 கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று இந்திய ஹஜ் கமிட்டி முடிவு செய்துள்ளது.

இந்திய ஹஜ் கமிட்டி மூலம் 2018 ஆம் ஆண்டு ஹஜ் செய்த ஹஜ் யாத்ரீகர்கள் ஏற்கனவே செலுத்திய தொகையை விட இந்திய ஹஜ் கமிட்டிக்கு ரூ 73 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரிகட்ட ஹஜ் பயணம் மேற்கொண்ட ஹஜ் யாத்ரீகர்களிடம் நபர் ஒன்றுக்கு கூடுதலாக ரூ 5600 வசூலிக்க ஹஜ் கமிட்டி முடிவு செய்துள்ளது. ஏற்கனவே டெண்டுகளுக்காக வசூலிக்கப் பட்ட ரூ 2500 ஹஜ் கமிட்டியிடம் நிலுவையில் உள்ளதாலும் அது ஹஜ் யாத்ரீகர்களுக்கு திருப்பி அளிக்கப் படாததால், அது தவிர ரூ 3000 மட்டும் செலுத்தினால் போதுமானது என கூறப் பட்டுள்ளது. இதுகுறித்து ஹஜ் பயணம் மேற்கொண்ட ஹஜ் யாத்ரீகர்களுக்கு கடிதம் மூலம் தகவல் அனுப்பப்படும் என்றும் இதுகுறித்த கூட்ட முடிவில் எடுக்கப் பட்ட தீர்மாணத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததை அடுத்து இந்திய ஹஜ் கமிட்டிக்கு ரூ 73 கோடி இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...