நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்தவர் நடு ரோட்டில் வெட்டிக் கொலை!

செப்டம்பர் 26, 2018 501

ஐதராபாத் (26 செப் 2018): தெலுங்கானா மாநிலத்தில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்தவர் நடுரோட்டில் நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

ஐதராபாத் ராஜேந்திர நகர் அத்தாபூர் என்ற பகுதியில், ரமேஷ் என்பவரே வெட்டிப் படுகொலை செய்யப் பட்டார். தகவலறிந்து ஏசிபி அசோக் சக்ரவர்த்தி அங்கு விரைந்து வந்தார். அதன்பின் சம்பவம் நடந்த இடத்தில் இந்த கொலை குறித்து விசாரணையை தொடங்கினார்.

அப்போது முதற்கட்ட விசாரணையில், வெட்டிக்கொல்லப்பட்ட அந்த ரமேஷ் என்பவர் ஏ1 குற்றவாளி என்றும் ஒரு பழைய வழக்கிற்கு சாட்சியாக நீதிமன்றத்திற்கு சென்றுகொண்டிருந்தார் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் அது என்ன வழக்கு என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...