பாப்புலர் ஃப்ரெண்ட் தொண்டர் மீது கொலை வெறி தாக்குதல்!

செப்டம்பர் 27, 2018 673

பாட்னா (27 செப் 2018): பீஹார் மாநிலத்தில் பப்புலர் ஃப்ரெண்ட் தொண்டர் மீது பஜ்ரங்தள் கும்பல் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்டின் பீஹார் மாநிலம் ஷாப்ரா பகுதியை சார்ந்த அலி ஜான் எனும் செயல் வீரரை பஜ்ரங்தலை சார்ந்த 15 க்கும் மேற்பட்டவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அவரை கொலை செய்யும் நோக்குடன் வந்த குண்டர்களை தனியாக இருந்த அலி ஜான் அவரால் இயன்ற அளவு எதிர் கொண்டுள்ளார்.

இதனை அறிந்த பாப்புலர் ஃப்ரண்டின் பாட்னா பகுதியை சார்ந்த நிர்வாகிகள் PMCH மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் அவரை சந்தித்து சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஆயத்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...