சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் - உச்ச நீதிமன்றம் அனுமதி!

செப்டம்பர் 28, 2018 516

புதுடெல்லி (28 செப் 2018): சபரிமலைக்கு அனைத்து பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐயப்பன் கோயிலுக்கு ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பெண்களில் 10 வயது முதல் 50 வயதுக்குட்டப்பட்டவர்களுக்கு அனுமதியில்லை. இந்நிலையில் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். அதில் அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. பாலினச்சமத்துவத்துக்கு எதிரானது எனக் கோரப்பட்டது.

இந்த வழக்கில் தங்கள் பதிலைத் தெரிவித்த கேரள இடதுசாரி அரசு, பருவம் எய்திய பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கிறோம் என்று கடந்த ஜூலை 18-ம் தேதி மனுத்தாக்கல் செய்தது. அதேசமயம் முன்பு கேரளாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் இதுதொடர்பான தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது, தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு அளித்த உத்தரவில் ஒரு நீதிபதி தவிர நான்கு பேர் ஒரே தீர்ப்பை அளித்ததால் அந்த தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...