புது மணப் பெண் கணவர் வீட்டு உறவினர்களால் வன்புணர்வு!

செப்டம்பர் 30, 2018 731

புதுடெல்லி (30 செப் 2018): அரியானாவில் புது மணப் பெண் கணவர் வீட்டு உறவினர்களால் வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.

அரியானா மாநிலம் யமுனா நகரில் பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவர் வீட்டார் பெண்ணின் தந்தையை அழைத்து மகள் மனநிலை சரியில்லாமல் உள்ளார் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பெண்ணின் தந்தை சென்று பார்க்கையில் மகள் சுய நினைவின்றி கிடந்துள்ளார். சுய நினைவு வநத பின்பு நடந்த சம்பவங்களை பெண் கூறியுள்ளார். கணவரின் தம்பி, மச்சான் என குடும்பமே அந்த பெண்ணை வன்புணர்வு செய்துள்ளது.

இதுகுறித்து போலீசில் பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...