வரதட்சனை கொடுக்க மறுத்ததால் முத்தலாக் கொடுத்ததாக கணவர் மீது புகார்!

செப்டம்பர் 30, 2018 602

லக்னோ (30 செப் 2018): உத்திர பிரதேசத்தில் கணவர் வீட்டார் வரதட்சனை கேட்டு கொடுக்காததால் கணவர் முத்தலாக் கொடுத்ததாக போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

உத்திர பிரதேசம் தனாபவன் என்ற பகுதியில் ஷாம்லி என்ற பெண் போலீசில் அளித்துள்ள புகாரில், "என் கணவர் குடும்பத்தார் ரூ 50 ஆயிரம் வரதட்சனை கேட்டனர். ஆனால் என் வீட்டினரால் அதனை கொடுக்க முடியவில்லை. இதனால் நான் கணவர் வீட்டினரால் துன்புறுத்தப் பட்டேன் மேலும் என் கணவர் எனக்கு முத்தலாக் கொடுத்துள்ளார்" என்று புகார் அளிக்கப் பட்டுள்ளது.

புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் அதிகாரி தினேஷ் குமார் கணவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

முத்தலாக் கொடுப்பது கிரிமினல் குற்றமாக அவசரச் சட்டம் இயற்றப் பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...