கோவிலில் வைத்து ஐந்து வயது சிறுமி கோவில் குருக்களால் வன்புணர்வு!

அக்டோபர் 04, 2018 586

போபால் (04 அக் 2018): மத்திய பிரதேசத்தில் ஐந்து வயது சிறுமி இரண்டு கோவில் குருக்களால் கோவிலில் வைத்து வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.

மத்திய பிரதேசம் தாத்தியா மாவட்டத்தில் கோவிலுக்கு பெற்றோருடன் சாமி கும்பிட சென்ற சிறுமியிடம் சாக்லேட் தருவதாக கூறி கோவில் குருக்கள் ராஜு பண்டிட், மற்றும் பத்தோலி பிரஜபதி ஆகிய இருவர் கோவில் உள்ளே அழைத்துச் சென்று வன்புணர்வு செய்துள்ளனர்.

பின்பு பெற்றோர் சிறுமியை தேடியலைந்தபோது அழுதுகொண்டு இருந்துள்ளார். மேலும் சிறுமியின் அந்தரங்கங்கள் காயம் அடைந்து காணப் பட்டது இதனை அடுத்து போலீசில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

ஏழை விவசாயிகளின் மகளான பாதிக்கப் பட்ட சிறுமி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இதற்கிடையே கோவில் குருக்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...