பெட்ரோல் விலை குறைப்பு - மத்திய அரசு நடவடிக்கை!

அக்டோபர் 04, 2018 541

புதுடெல்லி (04 அக் 2018): பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. அதேவேலையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் இன்று ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண் ஜெட்லி, "பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசால் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்தவகையில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.2.50 குறைக்கப்படும். அதாவது பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி ரூ.1.50 மற்றும் எண்ணெய் நிறுவனம் ரூ.1 என மொத்தம் ரூ.2.50 குறைக்கப்படும் என தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...