ஹாபீஸ் ஜுனைது படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு ஜாமீன்!

அக்டோபர் 04, 2018 735

சண்டீகர் (04 அக் 2018): ஹாபீஸ் ஜுனைது கான் படுகொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான நரேஷ் குமாருக்கு அரியானா உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த வருடம் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்திற்காக டெல்லியிலிருந்து பொருட்கள் வாங்கிச் சென்ற 17 வயது சிறுவன் ஹாபீஸ் ஜுனைத் மற்றும் அவரது சகோதரர்கள் ரெயிலில் பயணம் மேற்கொண்ட போது பசு பயங்கரவாத கும்பலால் கொடூரமாக தாக்கப் பட்டனர்.

இந்த தாக்குதலில் சிறுவன் ஜுனைத் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த படுகொலை இந்தியாவையே அதிர்ச்சி அடைய செய்தது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப் பட்ட நரேஷ் குமார் என்பவரை பஞ்சாப் அரியானா உயர் நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்துள்ளது.

முன்னதாக ஜுனைதின் தந்தை ஜலாலுத்தீன் இவ்வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என்று நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனுவை நீதிமன்ற தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது குறிப்பிடத் தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...