மியான்மர் சென்ற முஸ்லிம்கள் கொலை செய்யப் படுவார்கள்- ரோஹிங்கிய அகதி!

அக்டோபர் 07, 2018 667

புதுடெல்லி (07 அக் 2018): மியான்மருக்கு மீண்டும் சென்ற முஸ்லிம்கள் அங்கு கொலை செய்யப் படுவார்கள் என்று ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி கலிண்டி குஞ்ச் அகதிகள் முகாமில் வசிக்கும் முஸ்லிம்கள் ரோஹிங்கியா செல்ல விரும்பவில்லை. ஆனால் இந்தியா அவர்களை மீண்டும் ரோஹிங்கியாவுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் அகதிகள் அங்கு சென்றால் நிச்சயமாக கொலை செய்யப் படுவோம் என்று தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த வெள்ளி அன்று ஏழு ரோஹிங்கிய முஸ்லிம்கள் மியான்மருக்கு திருப்பி அனுப்பி வைக்கப் பட்ட நிலையில் அவர்கள் கொலை செய்யப் படுவார்கள் என்று மிகவும் அச்சத்துடன் இதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த ஒரு அகதி, எங்களுக்கு எதுவும் வேண்டாம், அமைதியான வாழ்க்கை மட்டுமே வேண்டும் அது போதும் அதற்காக இங்கேயே தங்கிக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...