முடக்கப் படும் பத்திரிகையாளர்களின் ஃபேஸ்புக் கணக்குகள்!

அக்டோபர் 11, 2018 452

புதுடெல்லி (11 அக் 2018): அரசுக்கு எதிரான கருத்துக்களைப் பதிந்து வருவதாக கூறி கடந்த 15 நாட்களில் 12 பத்திரிகையாளர்களின் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் அயோத்தி வழக்கில்,முன்பு செய்த விசாரணையை மறுபரிசீலனை செய்யப் போவதில்லை என்றும் கோவில்கள் மதத்துடன் இணைந்தது அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இந்தத் தீர்ப்பு குறித்து பத்திரிகையாளர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.கருத்து தெரிவித்த மற்றும் தீர்ப்பை வரவேற்காமல் எழுதியவர்களின் கணக்குகள் யாவும் முடக்கப்பட்டன.

இணைய ஊடக பத்திரிகையாளர்களான ஜனதா கா ரிபோர்டர் (Janata Ka Reporter) என்ற இணையதளத்தில் பணிபுரியும் ரிஃபட் ஜாவத்,மற்றும் காரவான் டெய்லி வெப்ஸைட்டில் பணிபுரியும் பல பத்திரிகையாளர்களின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. பத்திரிகையாளர் ரிஃபட் ஜாவத்,தன் ஃபேஸ்புக் கணக்கில் ராஃபேல் ஊழல் குறித்து முதன் முதலில் எழுதிய நேரத்தில் தன் கணக்குகள் முடக்கப்பட்டதாக கூறினார்.பின் மீண்டும் அயோத்தி தீர்ப்பு வெளியான பின் மீண்டும் தன் ஃபேஸ்புக் கணக்கு செயல்படாமல் போனதாகவும் கூறியுள்ளார்.இதேபோல டைனிக் பாஸ்கர் (Dainik Bhaskar)செய்தித்தாளின் எடிட்டர்களான பிரேமா நிகி மற்றும் அவரது கணவர் அஜய் பிரகாஷ் ஆகியோரின் ஃபேஸ்புக் கணக்குகளும் மற்றும் அந்நிறுவன ஊழியர்கள் 5 பேரின் கணக்குகளும் முடக்கப்பட்டன.

அரசுக்கு எதிராக கருத்தை பதிவு செய்ததாக காரவேன் டெய்லி (Caravan Daily) எடிட்டர் மும்தாஸ் ஆலமின் ஃபேஸ்புக் கணக்கும் முடங்கப்பட்டது.இதேபோல பொல்டா ஹிந்துஸ்தான் (Bolta Hindustan) நிறுவன ஊழியர்கள் 5 பேர் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மக்கள் ரிப்போர்ட்டின் இணை ஆசிரியர் முஹம்மது ஷிப்லி பேஸ்புக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது...ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கப்படுவது குறித்து,இந்தியாவின் ஃபேஸ்புக் தகவல் தொடர்பு இயக்குநர் அம்ரித் அஹுஜாவிடம் விளக்கம் கேட்டு 48 மணி நேரமாகியும் தற்போது வரை எந்த பதிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...