மத்திய அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு - பதவி விலக காங். கோரிக்கை!

அக்டோபர் 11, 2018 420

புதுடெல்லி (11 அக் 2018): பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மத்திய வெளியுறவு இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பலர் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். அக்பருக்கு கீழ் பணியாற்றியபோது, தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெய்பால் ரெட்டி, பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து திருப்திகரமான விளக்கத்தை எம்.ஜே.அக்பர் வழங்க வேண்டும் அல்லது உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். தீவிர குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அக்பர், அமைச்சரவையில் நீடிப்பது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், அமைச்சரின் நடத்தை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதிலளிக்க மறுப்பது ஏன் என்றும் ஜெய்பால் ரெட்டி கேள்வி எழுப்பினார். இதேபோல் தன் மீது பாலியல் புகார்களுக்கு அக்பர் விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜக அமைச்சர் மேனகா காந்தியும் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...