ரபேல் ஒப்பந்தம் குறித்து பிரான்ஸ் மீடியா பகீர் தகவல்!

அக்டோபர் 11, 2018 862

புதுடெல்லி (11 அக் 2018): மத்திய அரசின் கட்டாயத்தின் பேரிலேயே ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ரபேல் ஒப்பந்தம் செய்யப் பட்டதாக பிரான்ஸின் பிரபல மீடியா வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தைத் தவிர்த்து அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்ய பிரான்ஸ் நிறுவனம் நிர்ப்பந்திக்கப்பட்டதாக, முன்னாள் அதிபர் பிராங்கோஸ் ஹோலாண்டே கூறியிருந்தார்.

காங்கிரஸ் கட்சியும் ரபேல் ஒப்பந்தத்தில் மெகா ஊழல் நடந்திருப்பதாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் பிரான்சிலிருந்து வெளிவரும் மீடியாபார்ட் எனும் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், 36 ரபேல் போர் விமானங்களை 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்தியாவிடம் விற்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டின் டசால்ட்ஸ் நிறுவனம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தத்தை கட்டாயத்தின் பேரில் இறுதி செய்தது என்று பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே ரபேல் ஒப்பந்தத்தில் உள்ள ஊழலை மறைக்க மத்திய அரசு படாத பாடு படும் நிலையில், அடிமேல் அடியாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளமை மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...