விஜய் மல்லையா சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு!

அக்டோபர் 11, 2018 435

புதுடெல்லி (11 அக் 2018): விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள பல வங்கிகளில் ரூ. 9000 கோடிக்கு மேல் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார் விஜய் மல்லையா.

இதனை யடுத்து இந்திய அமலாக்கத்துறை அவரை லண்டனில் இருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தி நடவடிக்கைகள் எடுத்தது. ஆனால், லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா வழக்கு தொடர்ந்ததால் அதிலும் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் பெங்களூருவில் இருக்கும் விஜய் மலையாவுக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...