பல்வேறு பகுதிகளில் குண்டு வெடிப்புகள் நடத்தியதை ஒப்புக் கொண்ட இந்துத்வா அமைப்பு!

அக்டோபர் 11, 2018 834

மும்பை (11 அக் 2018): சன்தான் சனதா என்ற இந்துத்வா அமைப்பு இந்தியாவில் பல்வேறு குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டதை இந்தியா டுடே நடத்திய ஸ்டிங் ஆப்பரேஷன் மூலம் வெளியாகியுள்ளது.

சன்தான் சனதா அமைப்பைச் சேர்ந்த மகேஷ் தினகர் நிகாம் (45) என்பவரிடம் இந்தியா டுடே நடத்திய ஸ்டிங் ஆப்பரேஷனில், 2008 ஆம் ஆண்டு நடத்திய குண்டு வெடிப்பு சன்தான் சனதான் அமைப்புதான் என்பதை தெளிவு படுத்தியுள்ளார்.

சன்தான் சனதா அமைப்பு மஹாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் வளர்ந்து வரும் இந்துத்வா அமைப்பாகும், முன்னதாக இந்த அமைப்பு மீது குண்டு வெடிப்புகள் குறித்த குற்றச் சாட்டுகள் இருந்தபோது அதனை அந்த அமைப்பு மறுத்த நிலையில் தற்போது அதனை ஒப்புக் கொண்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஹரிபா கிருஷ்ணா திவேகர் (58) என்ற இன்னொருவர் குண்டு வெடிப்புகளை நடத்தியதை உறுதி படுத்தியுள்ளார். ஆனால் இவ்வழக்கிலிருந்து இவ்வமைப்பினர் ஏற்கனவே விடுவிக்கப் பட்டுவிட்டனர்.

இந்து கடவுள்களை அவமானப் படுத்தினால் குண்டு வெடிப்புகள் நடத்தப் படும் என்பதே இந்த அமைப்பின் குறிக்கோள் என்பதை அந்த ஸ்டிங் ஆப்பரேஷன் தெளிவு படுத்தியுள்ளது.

இதற்கிடையில், மகாராஷ்டிரத்தின் முன்னாள் முதலமைச்சரான ப்ரித்விராஜ் சவான் சன்தான் சனதா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித், குண்டு வெடிப்புகள் தொடர்பான சன்தான் சனதா அமைப்புக்கு எதிரான வழக்குகளை மறு விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...