மாணவர்களை மதரீதியாக தனிமை படுத்திய ஆசிரியர்!

அக்டோபர் 11, 2018 607

புதுடெல்லி (11 அக் 2018): இந்து, முஸ்லிம் மாணவர்களை தனித்தனியாக அமர வைத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

டெல்லி வடபகுதி வஸிராபாத் அரசு ஆரம்பப் பள்ளி ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர் தனது வகுப்பில் உள்ள மாணவர்களை இந்துக்கள் ஒரு பகுதியாகவும், முஸ்லிம்கள் ஒரு பகுதியாகவும் தனிமைப் படுத்தியுள்ளார். மேலும் வருகைப் பதிவிலும் அவ்வாறே பெயர்களை பதிவிட்டுள்ளார்.

இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் இதனை கடுமையாக கடை பிடித்துள்ளார். இது தொடர்பாக கல்வித்துறை இயக்குநருக்கு கொடுக்கப் பட்ட தகவலின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டு, குறிப்பிட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார். அங்கு பணிபுரியும் சில ஆசிரியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...