முதல்வரை நோக்கி செருப்பை வீசிய இளைஞர்!

அக்டோபர் 11, 2018 475

பாட்னா (11 அக் 2018): பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீது செருப்பு வீசிய இளைஞர் கைது செய்யப் பட்டுள்ளார்.

நிதிஷ்குமார் மற்றும் அவரது ஐக்கிய ஜனதா தலைவர்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில், முதலமைச்சர் நிதிஷின் மீது ஒரு செருப்பு வீசியுள்ளார். ஆனால், வீசப்பட்ட செருப்பு நிதிஷ் குமார் மீது படவில்லை. இதனையடுத்து கூட்டத்தில் இருந்தவர்கள் இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்தார்கள். இளைஞரையும் செருப்பால் தாக்கினர். இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸ் இளைஞரை அங்கிருந்து இழுத்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...