நவராத்திரி நோன்பிருந்த முஸ்லிம்!

அக்டோபர் 14, 2018 545

லக்னோ (14 அக் 2018): உத்திர பிரதேசத்தில் மத ஒற்றுமையை வலியுறுத்தி முஸ்லிம் ஒருவர் நவராத்திரி நோன்பிருந்துள்ளார்.

உத்திர பிரதேசம் சித்தார்த் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது ஷஃபீக் என்பவர் 9 நாட்கள் நவராத்திரி நோன்பிருந்துள்ளார். ஷஃபீக் அந்த கிராமத்தின் தலைவர் ஆவார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், கடந்த 5 ஆண்டுகளாக நவராத்திரி நோன்பிருப்பதாகவும், இந்த முறையை மேலும் பல முஸ்லிமகள் அந்த கிராமத்தில் கடை பிடிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்துக்களும் முஸ்லிம்களும் நவராத்திரியை ஒரே முறையில் கொண்டாடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு செயல் படுவதால் நம்மிடையே உள்ள வெறுப்புகள் அகன்று ஒற்றுமை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...