அட பாவிங்களா உயிரை விட ஜாதி முக்கியமா?

அக்டோபர் 15, 2018 606

போபால் (15 அக் 2018): மத்திய பிரதேசத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த மருத்துவர் உயர் ஜாதியை சேர்ந்தவரை தொட்டு சிகிச்சை அளித்ததால் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளார்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் கார்ஹா பகுதியில் அரசு மருத்துமனை உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு உயர் ஜாதியை சேந்த இரண்டு பெண்கள் விபத்தில் காயமடைந்து அங்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அப்போது பணியிலிருந்த கீதேஷ் ராத்ரே என்ற பழங்குடி இனத்தை சேர்ந்த டாக்டர் சிகிச்சை அளித்துள்ளார். அந்த நேரத்தில், காயமடைந்த பெண்களின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர்.

இந்நிலையில் பழங்குடி டாக்டர் சிகிச்சை அளிக்க எதிர்ப்பு தெரிவித்து மேலும் கீதேஷை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், உயர் சாதி மருத்துவர்கள் மட்டுமே தங்கள் வீட்டு பெண்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் அக்கும்பல் நிர்பந்தித்துள்ளது.

இதனை அடுத்து, டாக்டர் கீதேத் இதுதொடர்பாக போலீசில் புகாரளித்துள்ளார். புகாரின் பெயரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...