சபரிமலை போராட்டத்தில் வெடித்த வன்முறை - 144 தடை உத்தரவு!

அக்டோபர் 17, 2018 585

திருவனந்தபுரம் (17 அக் 2018): சபரிமலை போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தின் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் வரலாற்று தீர்ப்பினை வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் ஆண்கள் மட்டுமின்றி ஏராளமான பெண்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் ஐப்பசி மாத புஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. வரும் 22ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடை திறந்திருக்கும். கோவிலுக்கு பெண்கள் வருவதை தடுக்கும் வகையில் நிலக்கல் மற்றும் பம்பா பகுதியில் ஏராளமான போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் போராட்டக்காரர்கள் மற்றும் இந்து அமைப்பினர் சபரிமலைக்கு செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் சோதனை செய்து, பெண்கள் யாராவது இருந்தால் கீழே இறங்குபடி வற்புறுத்தினர். இதனை சேகரிக்க சென்ற பெண் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தபட்டது. பின்னர் வன்முறையில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...